திருநெல்வேலி

முரட்டு பக்​தரை விஞ்சி முழுக் கிணறு தாண்​டு​வாரா அனிதா?

திரு நெல்வேலி, நவ. 25: தூத் துக் குடி மாவட்ட திமுக செய ல ரான "முரட்டு பக் தர்' என். பெரி ய சா மி யின் கடும் எதிர்ப் பை யும் தாண்டி திருச் செந் தூர் தொகு தி யின் வேட் பா ளர் வாய்ப் பைப் பெற்று "அரைக் க

ப. இசக்கி

திரு நெல்வேலி, நவ. 25: தூத் துக் குடி மாவட்ட திமுக செய ல ரான "முரட்டு பக் தர்' என். பெரி ய சா மி யின் கடும் எதிர்ப் பை யும் தாண்டி திருச் செந் தூர் தொகு தி யின் வேட் பா ளர் வாய்ப் பைப் பெற்று "அரைக் கிணறு'  தாண் டி யுள் ளார் அனிதா ஆர். ராதா கி ருஷ் ணன்.

இனி, அனி தாவை முழுக் கிணற் றை யும் தாண் ட வைக்க வேண் டிய பெரும் பொறுப்பு பெரி ய சாமி தலை யில் விழுந் துள்ள நிலை யில் அவர் தேர் தல் பணி யில் சுறு சு றுப்பு காட் டு வாரா என்ற கேள்வி எழுந் துள் ளது.

அதி மு க வில் அசைக்க முடி யாத சக் தி யாக இருந்த அனிதா, கட் சித் தலைமை மீது எழுந்த அதி ருப்தி கார ண மாக திருச் செந் தூர் எம்.எல்.ஏ. பத வியை ராஜி னாமா செய் து விட்டு திமு க வில் இணைந் தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரி வித் த வர் பெரி ய சாமி. இப் போது திருச் செந் தூர் தொகு திக்கு இடைத் தேர் தல் அறி விக் கப் பட் டுள் ளது. தேர் த லுக்கு முன்பே இத் தொகு தி யின் இடை தேர் தல் வேட் பா ளர் அனி தா தான் என திமுக வட் டா ரத் தில் கூறப் பட் டது. எனி னும், அதை மாற் றி வி ட லாம் என பெரி ய சாமி எண் ணிக் கொண் டி ருந் தா ராம். அதற் கான முயற் சி யி லும் ஈடு பட்டு வந் தார்.

இடைத் தேர் த லும் அறி விக் கப் பட்டு திமுக வேட் பா ளர் தேர்வு தொடங் கி ய போது கட் சித் தலைமை அலு வ ல கத் தில் அனிதா விருப்ப மனு தாக் கல் செய் தார். எதிர் பார்த் தது போலவே அனி தா வுக்கு வாய்ப்பு கொடுக்க கடும் எதிர்ப்பு தெரி வித் தி ருக் கி றார் பெரி ய சாமி.

அனி தா வுக் குப் பதி லாக, அவ ரது எதிர்த் த ரப் பான முன் னாள் மத் திய அமைச் சர் வெ. ராதிகா செல் விக்கு வாய்ப்பு வழங்க வேண் டும் என பெரி ய சாமி வலி யு றுத் தி யுள் ளார். அனி தா வுக்கு வாய்ப்பு கொடுக் கா விட் டால், கட்சி மாறி திமு க வுக்கு வரு வோ ருக்கு அளிக் கப் ப டும் வாக் கு று தி க ளின் நம் ப கத் தன்மை கேள் விக் கு றி யாகி விடும் என் ப தால் அவ ருக்கு வாய்ப்பு அளிப் ப தில் கட் சித் தலைமை உறு தி யாக இருந் தது. எனவே, பெரி ய சா மியை சமா தா னம் செய்து அனி தா வுக்கு உறு தி ய ளிக் கப் பட் ட படி வாய்ப்பு வழங் கப் பட்டு விட் ட தாக திமுக வட் டா ரங் கள் தெரி வித் தன. இதன் மூலம்  "அரைக் கிணறு'  தாண் டி யுள் ளார் அனிதா.

இச் சூழ் நி லை யில் அனி தா வின் வெற் றிக்கு பெரி ய சாமி ஒத் து ழைப்பு அளிப் பாரா என்ற கேள்வி திமுக வட் டா ரத் தில் எழுந் துள் ளது.

அனிதா வெற்றி பெற்று அமைச் ச ராகி விட் டால் அது தனது எதிர் கால அர சி ய லுக்கு சிக் கலை ஏற் ப டுத் தும். எனவே, இப் போதே எதிர்ப் பைப் பதிவு செய் தால் அதன் மூலம் சமா தான நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட்டு தனது பத வி யும், தனது மக ளின் பத வி யும் பாது காக் கப் ப டும் என்ற எண் ணத் தில் கூட பெரி ய சாமி எதிர்ப்பு தெரி வித்து இருக் க லாம். மற் ற படி அனி தா வின் வெற் றிக்கு பெரி ய சாமி முழு மூச் சு டன் பணி யாற் று வார் என பெரி ய சா மி யைப் பற்றி அறிந் த வர் கள் கூறு கின் ற னர்.

1998 மக் க ள வைத் தேர்த லில் திரு நெல்வேலி தொகு தி யில் திமுக சார் பில் போட் டி யிட்ட சரத் கு மார் தோல்வி அடைந் தார். அதற்கு பெரி ய சாமி செய்த "உள் ளடி வேலை' யும் ஒரு கார ணம் என புகார் கூறப் பட் டது. அதில் பெரி ய சாமி தப் பித்து இருக் க லாம். ஆனால் இப் போது நிலைமை அப் படி அல்ல.

அனிதா தோல்வி அடைந் தால் அது அவ ரது சொந்த தோல்வி அல்ல. திமு க வின் தோல்வி. அதை கட் சித் தலை ûமை சரத் கு மார் தோல் வியை ஏற் றுக் கொண் டது போல ஏற் றுக் கொள் ளாது. தான் மாவட் டச் செய லர், மகள் அமைச் சர் என்ற சூழ் நி லை யில், அதற் கான விலையை பெரி ய சாமி பெரிய அள வில் கொடுக்க வேண் டி ய தாகி விடும் என் றும் அவர் கள் கூறு கின் ற னர்.

அது மட் டு மன்றி, 1998 மக் க ள வைத் தேர் தல் போன்று இந்த இடைத் தேர் தலை பெரி ய சாமி மட் டுமே கையா ளப் போவ தில்லை. திமு க வின் தென் மண் ட லச் செய ல ரும், மத் திய அமைச் ச ரு மான அழ கி ரியின் மேற் பார் வை யில் தென் மாவட்ட திமுக செய லர் கள் 10 பேர் திருச் செந் தூ ரில் முகா மிட்டு பணி யாற் று வார் கள். தொகு தி யில் மொத் தம் உள்ள 196 வாக் குச் சா வ டி க ளும் 10 ஆகப் பிரித்து ஒவ் வொ ரு வ ரி ட மும் ஒப் ப டைக் கப் ப டும். அதில் பெரி ய சாமி வசம் சுமார் 19 வாக் குச் சா வ டி கள் மட் டுமே இருக் கும். மற்ற வாக் குச் சா வ டி க ளில் பெரி ய சா மி யால் எது வும் செய்ய இய லாது. பெரி ய சா மி யின் கட் டுப் பாட் டில் உள்ள வாக் குச் சா வ டி க ளில் எதிர்க் கட் சி யை விட கூடு தல் வாக் கு களை திமுக பெறா விட் டால் அவ ரது பாடு சங் க ட மாகி விடும். அதெல் லாம் தெரி யா த வர் அல்ல பெரி ய சாமி. அத னால் அனி தா வுக்கு எதி ராக அவ ரால் ஒன் றும் செய் து விட முடி யாது என் றும் திமு க வி னர் நம் பிக்கை தெரி விக் கின் ற னர்.

இதெல் லாம் கட் சித் தலை மைக்கு நன் றா கவே தெரி யும். அத னால் தான் அவ ரது எதிர்ப் பை யும் மீறி அனி தா வுக்கு வாய்ப்பு அளிக் கப் பட் டுள் ளது. ஒன் று பட்ட திமு க வில் வைகோ வின் விசு வா சி யாக இருந் த வர் பெரி ய சாமி. அவ ருக்கு "முரட்டு பக் தன்' என்ற அடை மொழி முதல் வர் கரு ணா நி தி யால் அளிக் கப் பட் டது என கூறி னா லும், "கலை ஞ ரின் முரட்டு பக் தன்' என அவரை அடிக் கடி அழைத்து அதை உறு தி ப டுத் தி ய வர் வைகோ தான்.

திமு க வில் இருந்து வைகோ பிரிந் த போது அவ ரு டன் செல் லா மல் திமு க வில் தங் கி விட் ட வர் பெரி ய சாமி. அந்த நன் றிக் கா கத் தான் திமுக தலைமை இத் தனை நாளும் பெரி ய சா மி யி டம் அனு தா பம் காட்டி வரு கி றது என் கி றது திமுக வட் டா ரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT