திருநெல்வேலி

அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கண்காணிக்கப்படுமா வாகனக் காப்பகங்கள்?

திருநெல்வேலி, நவ. 26:   திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் வாகனக் காப்பகங்கள் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.   திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்

கே.வாசுதேவன்

திருநெல்வேலி, நவ. 26:   திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் வாகனக் காப்பகங்கள் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.

  திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்ணார்பேட்டை, சந்திப்பு, நகரம், பேட்டை, மேலப்பாளையம் என பல பகுதிகளில் அண்மைக்காலமாக வாகனக் காப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

  மாநகராட்சி கட்டுப்பாட்டில் வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலைய வாகனக் காப்பகம் மட்டும் செயல்படுகிறது. தற்போது இந்த காப்பகம் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இது தவிர மாநகர்ப் பகுதியில் சில தனியார் வாகனக் காப்பகங்கள்தான் உரிமத்தோடு செயல்படுதாக மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது.

  மாநகராட்சி உரிமம் பெறாமல் அண்மைக்காலமாக பஸ் நிறுத்தங்கள், மக்கள் அதிகமாக வரும் பகுதிகளில் பல வாகனக் காப்பகங்கள் உருவாகியுள்ளன.

  சில வாகனக் காப்பகங்களில் திருட்டு வாகனங்கள் நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வாகனக் காப்பகத்தில் கடந்த வாரத்தில் 5 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  இதேபோல வேறு சில வாகனக் காப்பகங்களும் செயல்படுவதாக மாநகர காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சில வாகனக் காப்பகங்களில் திருட்டு வாகனம் என்று தெரிந்தால், அதை அங்கு விட்டுச் செல்ல கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் தெரிய வந்துள்ளது.

  நாள் கணக்கில் நிற்கும் வாகனங்களில் உதிரிப் பாகங்கள் திருடப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

   திருட்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்ட வாகனக் காப்பகம் மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் காவல் துறை எடுக்கவில்லை.

  வாகனக் காப்பகங்கள் நடத்த மாநகராட்சி உரிமம் வழங்குகிறது என்ற விதிமுறையால், காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

  எனவே, உரிமம் பெறாத வாகனக் காப்பகங்களை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT