ஆறுமுகனேரி, நவ.28:தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி, பள்ளிவாசல்கள், கடற்கரையில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
÷காயல்பட்டினம் கடற்கரையில் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு சார்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
÷தொழுகையில் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் காயல்பட்டினம் கிளைத் தலைவர் சம்சுதீன், துணைத் தலைவர் முஜிபூர் ரஹ்மான், செயலாளர் ரபீக், பொருளாளர் சுலைமான், மூசா, சட்னி யாசின் மற்றும் டாக்டர் அபுல் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
÷மேலும், காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளிவாசல், காதிரிய்யா கொடிமரத்து சிறுநயினார் பள்ளிவாசல், குருவித்துறை பள்ளிவாசல், அப்பா பள்ளிவாசல், அல்ஜாமி உல் அஸ்ஹர் ஜூம் ஆ பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், அரிசிய்யா பள்ளிவாசல், தாயிம் பள்ளிவாசல் மற்றும் பெரிய நெசவுத் தெரு பள்ளிவாசல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும் மற்றும் 100ó-க்கும் மேற்பட்ட தைக்காக்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.÷ மாலையில் புத்தாடைகள் அணிந்து கடற்கரையில் கூடிய முஸ்லிம்கள் உறவினர்கள், நண்பர்களிடம் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.