திருநெல்வேலி

பாலிதீன் கால்வாயாக மாறும் பாளையங்கால்வாய்

திருநெல்வேலி, அக். 4:   திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் பாய்ந்தோடும் பாளையங்கால்வாய், "பாலிதீன் பை' கால்வாயாக வருகிறது.   பழவூரில் இருந்து தொடங்கி சுமார் 52 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது பாளையங்கால்வாய

கே.வாசுதேவன்

திருநெல்வேலி, அக். 4:   திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் பாய்ந்தோடும் பாளையங்கால்வாய், "பாலிதீன் பை' கால்வாயாக வருகிறது.

  பழவூரில் இருந்து தொடங்கி சுமார் 52 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது பாளையங்கால்வாய். இக் கால்வாயின் மூலம் 57 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதன் மூலம், 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

  திருநெல்வேலி மாநகர் பகுதியில் இந்தக் கால்வாய் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இக் குளத்தின் மூலம் பழவூர், மேலசெவல், கீழசெவல், கீழ முன்னீர்பள்ளம், மேல முன்னீர்பள்ளம், மேலப்பாளையம், குறிச்சி, மூளிக்குளம் உள்பட திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

  இக்கால்வாய் மூலம் ஆண்டுக்கு கார், பிசானம் என இரு பருவங்களில் விவசாயிகள் தண்ணீர் பெற்று வேளாண்மை செய்கின்றனர்.

  விவசாயம் மட்டுமன்றி, திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது பாளையங்கால்வாய். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இக் கால்வாய், தற்போது சுகாதார சீர்கேட்டின் பிறப்பிடமாக உள்ளது.

  திருநெல்வேலிக்கு முன்புவரை அமலைச் செடிகளுடன் கலங்கிய நிலையில் வரும் தண்ணீர், மேலப்பாளையம் வந்தவுடன் சாக்கடையாக மாறி விடுகிறது. அந்த அளவுக்கு பாளையங்கால்வாயில் கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்படுகின்றன.

  குறிப்பாக மாடு, ஆடு, கோழி ஆகியவற்றின் இறைச்சிக் கழிவுப் பொருள்கள் கொட்டப்படுவதால், கால்வாயை நெருங்க கூட முடியாத அளவுக்கு தூர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்பு பகுதிகளில் வீட்டுக் குப்பைகள் போடப்படுவதால், சில இடங்களில் கால்வாய் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.

  பாளைங்கோட்டை பகுதியில் ஓர்க்ஷாப் கழிவுகள், மளிகை, காய்கனி கடைகள், ஹோட்டல் ஆகியவற்றின் கழிவுகளை பாலிதீன் பைகளில் அடைத்து கால்வாயில் வீசப்படுகின்றன. இதனால், அந்தப் பகுதி முழுதும் பாலிதீன் பைகளால் நிறைந்து காணப்படுகிறது.

  இவ்வாறு கழிவுப் பொருள்கள் வரைமுறையின்றி கொட்டப்படுவதால், கால்வாயில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

  பாளையங்கால்வாயை, சிலர் கால்வாயாக பார்க்காமல், குப்பைத் தொட்டியாக பார்ப்பதால் குப்பை கொட்டப்படுவதை தடுக்க முடிவதில்லை என சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  இதனால் சுகாதாரம் சீர்கெடுவதோடு மட்டுமன்றி, மாநகர்ப் பகுதியில் நிலத்தடி நீரும் மாசுப்பட்டு வருகிறது. மேலும் இக் கால்வாயின் மூலம் வரும் தண்ணீரால், பயிர்களும் நோய்களுக்கு உள்ளாவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

  இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.

  இதே நிலைமை நீடிக்கும்பட்சத்தில், காலப்போக்கில் பாளையங்கால்வாய் யாருக்கும் பயன்படாத அளவுக்கு மாசுபட்டுவிடும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT