திருநெல்வேலி

ற்றாலத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு வனத் துறை தடை?

தென்காசி, அக். 14:   குற்றாலம் மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள உள்ளாட்சிக்கு வனத் துறை தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டும் என சுற்றுலாப

பா.​ பிரகாஷ்

தென்காசி, அக். 14:   குற்றாலம் மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள உள்ளாட்சிக்கு வனத் துறை தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.

  குற்றாலத்துக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப குற்றாலம் சிறப்பு நிலைப் பேரூராட்சியும், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றமும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

  குற்றாலம், பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, உள்ளிட்ட அருவிகள் குற்றாலம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகள். இவை பழைய குற்றாலம் பொதுப் பணித் துறை மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

  குற்றாலத்தில் சீசன் காலங்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் சுற்றுலாத் துறை மூலமும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன.

  குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, பேரருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி போலீஸôர் குளிக்க அனுமதிப்பதில்லை.

  ஆனால், புலியருவி, பழையகு ற்றாலம், சிற்றருவியில் பயணிகள் பயமின்றி குளிக்கலாம். சிற்றருவியில் வயதானோரும், குழந்தைகளும்கூட பாதுகாப்பாக குளிக்க ஏதுவாக உள்ளன.

  இதேநிலைதான் பழைய குற்றாலம் அருவியிலும் காணப்படுகிறது. சிற்றருவியில் குளிக்க கட்டணம் வசூலிக்கும் உரிமம் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது.

  சில ஆண்டுகளுக்கு முன்புவரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சிற்றருவிக்கு அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் பாதைகள் திறந்து விடப்பட்டிருந்தன.

  ஆனால், 4 ஆண்டுகளாக இப் பாதைகளை வனத் துறையினர் மூடிவிட்டனர். இதனால் கீழேயிருந்து அனைவரும் அருவி பகுதிக்கு நடந்தே செல்லவேண்டிய நிலை உள்ளது.

  இதேபோல, பழைய குற்றாலம் அருவி பகுதியில் ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அந்த இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்க ஊராட்சி முடிவு செய்தது.

  அதற்கு வனத் துறையிடமிருந்து சில அடி தொலைவு இடம் விட்டால்தான் ஊராட்சிக்குச் சொந்தமான இடத்துக்கு வந்து செல்ல முடியும் என்ற நிலை நிலவுகிறது. இதை வனத் துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் ஊராட்சி மன்றத்தால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

  இதற்கு அனுமதி வேண்டும் என்றும், சிற்றருவிக்குச் செல்லும் வழியிலுள்ள பாதைகளைத் திறந்துவிட வேண்டும் என்றும் வனத் துறைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

  அண்மையில் குற்றாலத்தில் நடைபெற்ற சாரல் விழாவில் தென்காசி எம்எல்ஏ வீ. கருப்பசாமிபாண்டியன் பேசும்போது, சிற்றருவி பாதையைத் திறக்க வனத் துறையினர் மறுப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் பேசும்போது வன அலுவலர்கள் மக்களின் உணர்வை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

  ஆனாலும் இது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து வனத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

  சிற்றருவி பகுதியும், பழைய குற்றாலத்தில் ஊராட்சி மன்றத்தினர் கேட்கும் பகுதியும் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட பகுதிகள்.  

   சிற்றருவி பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை வனத் துறை சார்பில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலம் விடப்பட்டது. அதனால் பாதைகள் திறந்துவிடப்பட்டன.

  ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தக் கோரியும், பாதைகளை மூடக் கோரியும் அதிகாரிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து பாதைகள் அடைக்கப்பட்டன. மேலும் இதுவரையிலும் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு எந்த மனுக்களும் வரவில்லை.

  இதுதொடர்பாக மனுக்கள் ஏதேனும் வந்தால் உயர் அலுவலர்களுக்குப் பரிந்துரைப்போம் என்றார்.  இப் பிரச்னையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு விரைவில் தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT