திருநெல்வேலி

விதிமுறைகளை மீறும் முகப்பு விளக்குகள்

திருநெல்வேலி, ஆக.24: விதிமுறைகளை மீறி வாகனங்களில் முகப்பு விளக்குகள் பொருத்தப்படுவது, சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அண்மைக்காலமாக அதிக

கே.வாசுதேவன்

திருநெல்வேலி, ஆக.24: விதிமுறைகளை மீறி வாகனங்களில் முகப்பு விளக்குகள் பொருத்தப்படுவது, சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் தான் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளில் 70 சதவிகிதம் வரை இரவிலேயே நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இரவு நேரத்தில் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு வாகனங்களின் வேகம், மோசமான சாலை, ஓட்டுநரின் கவனக்குறைவு என பல காரணங்கள் கூறப்பட்டாலும் வாகனங்களின் முகப்பு விளக்குகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன.

விதிமுறைகளை மீறி சில வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதிக ஒளியை உமிழும் முகப்பு விளக்குகளால், எதிரே வரும் வாகனத்தின் ஓட்டுநர் பார்வை தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த ஓட்டுநர், தெளிவற்ற நிலையில் உத்தேசமாகவே வாகனத்தை ஓட்டுகிறார். இதன் விளைவாக அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட விபத்துக்கு ஒட்டுமொத்த பழியும், ஓட்டுநர்கள் மீது விழுவதே நெருடலை ஏற்படுத்துகிறது.

வாகனங்களில் முகப்பு விளக்குகள் எந்தளவில், ஒளியை உமிழும் வகையில், இருக்க வேண்டும் என்று இந்திய மோட்டார் வாகனச் சட்டம் பல்வேறு விதிமுறைகளை வகுத்து இருந்ததாலும், அதை பெரும்பாலானோர் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

இந்திய மோட்டார் வாகனச் சட்டம், வாகனங்களின் முகப்பு விளக்குகள் கண்கள் கூசும் அளவுக்கு இருக்கக் கூடாது என கண்டிப்புடன் கூறுகிறது. ஆனால் தற்போது சாலையில் செல்லும் வாகனங்களில் இருக்கும் முகப்பு விளக்குகள், எதிரே வரும் வாகனத்தின் ஓட்டுநரின் கண்களின் பார்வையை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு அதிக சக்திவாய்ந்த ஒளியை உமிழுகிறது.

பொதுவாக ஒரு புதிய வாகனம் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வரும் முன்னர், அது அரசிடம் தடையின்மைச் சான்றிதழ் வாங்க வேண்டும் என விதிமுறை உள்ளது. புதிய வாகனங்களுக்கு மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் வாகன ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம், புனேயில் வாகன தயாரிப்பாளர் ஆய்வு முகமை ஆகியவற்றில் தடையின்மைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதேபோல மத்திய ரதேசம்,உத்தராஞ்சல் மாநிலங்களில் உள்ள மையங்களிலும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த மையங்களுக்கு ஒரு வாகனம் தடையின்மைச் சான்றிதழ் பெற எடுத்துச் செல்லும்போது, இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி முகப்பு விளக்கு உள்பட அனைத்து பாகங்களும் பொருத்தப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால் அங்கு சான்றிதழ் பெற்று,மாநில போக்குவரத்து ஆணையரின் ஒப்புதலோடு ஒரு வாகனம் விற்பனைக்கு வரும்போது, அந்த வாகனம் பல்வேறு விதிமுறை மீறலோடு உள்ளது.

குறிப்பாக, முகப்பு விளக்குகள் முற்றிலும் மாற்றப்படுகின்றன. தடையின்மைச் சான்றிதழ் பெறும்போது பொருத்தப்பட்டிருக்கும் முகப்பு விளக்கை, அதன் பின்னர் அந்த வாகனத்தில் பார்க்க முடியாது. விற்பனையைப் பெருக்குவதற்கும், வாடிக்கையாளர்களைக் கவருவதற்கும், பிற நிறுவனங்களின் வாகனத்தை விட,தங்களது வாகனங்கள் பாதுகாப்பானது என கூறிக் கொள்ளவும் இந்த ஏமாற்றுவேலையில் சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்திய வாகனச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரிடையாக இறங்கிய பின்னர்தான், இப்படிப்பட்ட ஏமாற்று வேலை அதிகம் நடைபெறுவதாக போக்குவரத்து துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார். இதில் வெள்ளை நிற ஒளியை உமிழும் முகப்பு விளக்குகளைக் கண்டிப்பாக பொருத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை பல வாகன தயாரிப்பு நிறுவனங்களும் கண்டுகொள்ளவில்லை என்றே கூறலாம்.

இன்று விற்பனைக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்களின் வாகனங்களின் முகப்பு விளக்குகள், வெள்ளை நிற ஒளியைத்தான் உமிழுகின்றன. ஆனால் இவற்றால் பாதிக்கப்படுவது என்னமோ நம் நாட்டு அப்பாவி மக்களும், வாகன ஓட்டிகளும் தான். இதில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தகுதிச் சான்றிதழ் வாங்க வரும்போது, விதிமுறைக்கு உட்பட்ட முகப்பு விளக்குளை பொருத்தி சான்றிதழ் வாங்கி விட்டு, பின்னர் வெள்ளை நிற ஒளியை உமிழும் விளக்குகளை மாட்டிவிடுகின்றனர்.

எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் அதற்கு ஓட்டுநரின் கவனக்குறைவு, மோசமான சாலை, போக்குவரத்து விதி மீறல் என மீண்டும் மீண்டும் இதே காரணங்களைக் கூறும் அரசு, விபத்துக்களுக்குரிய காரணங்களை இன்னும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சிக்குரியதே. அரசின் மேலோட்டமான பார்வையினால், இப்படிப்பட்ட பிரச்னைகளும் ஏமாற்று வேலைகளும் அதிகரித்து வருகின்றன.

அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாதபட்சத்தில், இழப்பு மக்களுக்கும்,நாட்டின் பொருளாதாரத்துக்கும் தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT