திருநெல்வேலி

பாச​னக் குளம் ஒன்றை "ரியல் எஸ்​டேட்' ஆபத்தி​லி​ருந்து மீட்க விவ​சா​யி​கள் தொடர் போராட்​டம்

திரு நெல்வேலி, மே 5: அரசு இயந் தி ரத் தின் அலட் சி யம், மெத் த னப் போக்கு கார ண மாக பாச னக் குளம் ஒன்றை "ரியல் எஸ் டேட்' ஆபத்தி லி ருந்து மீட்க விவ சா யி கள் தொடர் போராட் டம் நடத்த வேண் டிய நிலை ஏற் ப

ப. இசக்கி

திரு நெல்வேலி, மே 5: அரசு இயந் தி ரத் தின் அலட் சி யம், மெத் த னப் போக்கு கார ண மாக பாச னக் குளம் ஒன்றை "ரியல் எஸ் டேட்' ஆபத்தி லி ருந்து மீட்க விவ சா யி கள் தொடர் போராட் டம் நடத்த வேண் டிய நிலை ஏற் பட் டுள் ளது.

குளம் பறி போ னால் 3 கிராம மக் கள் பாதிக் கப் ப டு வ தோடு, சுமார் 156 ஏக் கர் நிலங் க ளும் பாசன வச தியை இழக் கும் அபா யம் ஏற் பட் டுள் ளது.

திரு நெல்வேலி மாவட் டம், கங் கை கொண் டான் அருகே உள் ளது ராஜ பதி புதுக் கு ளம். பொதுப் பணித் துறை யின் கட் டுப் பாட் டில் உள்ள இந்த குளத் தின் கீழ் 63.72 ஏக் கர் நன் செய் நிலங் க ளும், 92.39 ஏக் கர் புன் செய் நிலங் க ளும் என மொத் தம் 156 ஏக் கர் நிலங் கள் உள் ளன.

நன் செய் நிலங் க ளில் வழக் க மாக ஒரு போகம் விளை யும். இந்த ஆண்டு இரண் டா வது போக நடு வை யும் நட் டுள் ள னர். புன் செய் நிலங் க ளில் பருத்தி, தென்னை உள் ளிட்ட பணப் பயிர் களை பயி ரிட் டுள் ள னர். இந்த நிலங் கள் அனைத் தும் ராஜ பதி, வெங் க டா ச ல பு ரம், கரி சல் கு ளம் ஆகிய கிராம மக் க ளுக் குச் சொந் த மா னவை.

இந்த குளம் பல ஆண் டு க ளாக மரா மத்து செய் யப் ப டா மல் கிடந் த தால் கரை கள் உடைந்து நீர் தேங்க வழி யின்றி பாசன நிலங் கள் பாதிக் கப் பட்டு வந் தன. எனவே. 2004-ல் அதி முக ஆட் சி யின் போது ரூ.47.43 லட் சம் நிதி ஒதுக் கப் பட்டு குளத்தை சீர மைக்க முடிவு செய் யப் பட் டது. இதை ய றிந்த சிலர், குளம் இருக் கும் நிலம் தங் க ளுக் குச் சொந் த மா னது என்று கூறி னர்.

கரி சல் கு ளத் தைச் சேர்ந்த நிலச் சு வான் தார் ஒரு வ ருக் குச் சொந் த மான அந்த குளம், நில உச் ச வ ரம்பு சட் டத் தில் பறி போ கா மல் இருக்க அவர் அந்த குளம் இருக் கும் நிலத்தை சில ருக்கு விற் பனை செய் தி ருந் த தா கக் கூறப் ப டு கி றது. நிலத்தை வாங் கி ய வர் கள் தான் குளம் இருக் கும் நிலம் தங் க ளுக் குச் சொந் த மா னது என உரிமை கொண் டா டி னர். பின் னர், பொதுப் பணித் துறை அதி கா ரி கள் அவர் க ளி டம் பேச் சு வார்த்தை நடத்தி நிலத் திற்கு அரசு விதி மு றைப் ப டி யான இழப் பீட் டைத் தரு வ தா கக் கூறி எழுத்து மூலம் ஒப் பு தல் பெற்று குளத்தை சீர மைத் த னர். அதன் பின்பு அப் போ தைய முதல் வர் ஜெயல லிதா குளத்தை விவ சா யி க ளின் பயன் பாட் டுக்கு அர்ப் ப ணித் தார். இத னால், பாழ் பட்டு கிடந்த விளை நி லங் கள் பயன் பெற்று வந் தன.

ஆண் டு கள் பல கடந் தும் நிலத்தை அளித் த வர் க ளுக்கு அர சின் இழப் பீட் டுத் தொகை சென்று சேர வில்லை. நிலத்தை அளித்த 14 பேருக் கான இழப் பீட் டுத் தொகை ரூ. 13 லட் ச மா னது பொதுப் பணித் துறை யி ட மி ருந்து வரு வாய்த் துறைக்கு அளிக் கப் பட்டு அந்த நிதி வைப் புத் தொகை யாக வைக் கப் பட் டதே தவிர நில உரி மை யா ளர் க ளுக்கு வழங் கப் ப ட வில்லை.

இந் நி லை யில், கங் கை கொண் டா னில் தக வல் தொழில் நுட்ப பூங்கா திட் டம் தொடங் கப் பட் ட தால் அந் தப் பகு தி யில் நிலத் தின் விலை கிடு கி டு வென உயர்ந் தது. ஒரு ஏக் க ருக்கு ரூ. 15 லட் சம் முதல்

ரூ. 20 லட் சம் வரை விற் கப் பட்டு வரு கி றது. குளம் அமைந் துள்ள சுமார் 65 ஏக் கர் நிலத் தின் மதிப்பு பல கோடி ரூபாய் என் ப தால் நில உரி மை யா ளர் கள் குளத்தை மீண் டும் சொந் தம் கொண் டா டத் தொடங் கி னர்.

2008-ம் ஆண்டு அந்த நிலத்தை ஆளுங் கட்சி ஆத ரவு பெற்ற சிலர் பெற்று அதை வீட் டு ம னை க ளாக்கி விற் கத் தொடங் கி னர். அதற்கு வச தி யாக குளத் தின் கரையை மண் அள் ளும் இயந் தி ரம் மூலம் உடைத் த னர். இதை ய றிந்த விவ சா யி கள் எதிர்ப்பு தெரி வித் த னர். உடனே வரு வாய்த் துறை அதி கா ரி கள் விரைந்து சென்று அதைத் தடுத்து நிறுத் தி னர். பின் னர் வழக் கம் போல விவ சா யி கள் குளத்தை பயன் ப டுத்தி வந் த னர்.

அதன் பின்பு நில உரி மை யா ளர் க ளில் சிலர் நீதி மன் றத் தின் மூலம் உரிய உத் த ர வு க ளைப் பெற்று நிலத்தை விற் பனை செய் துள் ள தா க வும் கூறப் ப டு கி றது. இப் போது அந்த குளத் திற் குள் மூன்று வீடு கள் கட் டப் பட் டுள் ளன. மேலும் சிலர் வீடு களை கட் ட வும் திட் ட மிட் டுள் ள தாக கூறப் ப டு கி றது. எனவே, "ரியல் எஸ் டேட்' அதி பர் கள் தங் க ளின் அர சி யல் பலத் தைப் பயன் ப டுத்தி குளத்தை அப க ரித்து வீட் டு ம னை க ளாக மாற்றி விடு வார் களோ என விவ சா யி கள் அச் ச ம டைந் துள் ள னர்.

""குளத் திற் கான நிலத் தைக் கொடுத் த வர் க ளுக்கு அர சின் இழப் பீட்டை உரிய காலத் தில் அளித் தி ருந் தால் இந்த பிரச்னை ஏற் பட் டி ருக் காது. அப் போ தி ருந்த சில அதி கா ரி கள் செய்த தவறை மறைக் க வும், அவர் க ளைக் காப் பாற் ற வும் பின் னர் வந்த அதி கா ரி கள் மேற் கொண்ட முயற் சி யால் சிக் கல் ஏற் பட்டு இப் போது பிரச்னை முற்றி குளம் பறி போ கும் நிலை ஏற் பட் டுள் ளது'' என விவ சா யி கள் கூறு கின் ற னர்.

இத னி டையே குளத்தை மாவட்ட வரு வாய் அலு வ லர் பெ. ரம ண ச ரஸ் வதி, கோட் டாட் சி யர் தமிழ் செல்வி ஆகி யோர் செவ் வாய்க் கி ழமை பார் வை யிட்டு விவ சா யி கள் மற் றும் நில உரி மை யா ளர் க ளி டம் கருத்து கேட் டுள் ள னர். அவர் கள் மாவட்ட ஆட் சி ய ருக்கு அளிக் கும் அறிக் கை யின் அடிப் ப டை யில் குளம் தப் புமா அல் லது பறி போ குமா? எனத் தெரிய வரும். வயல் கா டு கள் எல் லாம் கான் கி ரீட் காடு க ளாக மாறி வ ரும் இன் றைய சூழ் நி லை யில் எஞ்சி இருக் கும் இது போன்ற குளங் க ளை யும், விளை நிலங் க ளை யும் பாது காக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பதே விவ சா யி க ளின் வலு வான கோரிக்கை.

""இந்த குளம் சீர மைக் கப் பட்ட பின்பு மூன்று கிராம மக் க ளின் வாழ் வா தா ரம் பாது காக் கப் பட் டுள் ளது. நிலத் தடி நீர் மட் டம் உயர்ந் துள் ளது. குளம் பறி போ னால் மூன்று கிரா மங் க ளில் வசிக் கும் மக் கள் பாதிக் கப் ப டு வார் கள். பாசன நிலங் க ளும் தரிசு நில மாகி விடும். எனவே, குளம் பறி போ வதை அரசு தடுக்க வேண் டும்'' என் றார் ராஜ ப தி யைச் சேர்ந்த விவ சாயி சி.எஸ். மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT