திருநெல்வேலி

அட்சய திருதியையொட்டி 6 டன் தங்கம் விற்பனைக்குத் தயார்

திருநெல்வேலி, மே 13: அட்சய திருதியையொட்டி, இந்த ஆண்டு தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக 6 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  அட்சயம் என்றால் அழியாதது, அள்ள, அள்ள குறையாதது என்று பொருள். இந்  நாளில

கே.வாசுதேவன்

திருநெல்வேலி, மே 13: அட்சய திருதியையொட்டி, இந்த ஆண்டு தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக 6 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

 அட்சயம் என்றால் அழியாதது, அள்ள, அள்ள குறையாதது என்று பொருள். இந்  நாளில் நல்ல நேரம் பார்த்து நகை, பொருள்கள் வாங்கினால் செல்வம் பல மடங்கு  பெருகும் என நம்பப்படுகிறது.

 அட்சய திருதியையன்று எந்தப் பொருளை வாங்கினாலும், அந்தப் பொருளை  ஆண்டு முழுவதும் வாங்கும் வாய்ப்பு கிட்டும் என கூறப்படுகிறது. இதனால் மக்கள்  தங்கம், வைரம், வெள்ளி போன்ற பொருள்களையும், நகைகளையும் வாங்கவே அதிகம்  ஆர்வம் காட்டுகின்றனர்.

 இதன்விளைவாக அட்சய திருதியையன்று நகைக் கடைகளில் மக்கள் கூட்டம்  கட்டுங்கடங்காமல் இருக்கிறது. இந் நாளில் நகைக் கடைகளில், வழக்கமான விற்பனையைவிட சுமார் 60 சதவிகிதம் அதிகமாக விற்பனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

 ஆண்டுக்கு ஆண்டு அட்சய திருதியையன்று தங்கம், வெள்ளி வாங்குவோரின்  எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது.

 இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு திருநெல்வேலி மாநகர் பகுதியில் உள்ள நகைக்  கடைகளில் அட்சய திருதியையன்று ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் விற்பனையாகி  இருப்பதைக் கூறலாம். மேலும் புதிய புதிய சலுகைகளையும், புதிய வகை நகைகளையும் வியாபாரிகள் இந் நாளில் அறிமுகப்படுத்துகின்றனர்.

  இந்தாண்டு அட்சய திருதியை மே 16ஆம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு சில  நகைக் கடைகள் முன்பதிவை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டன. நகைகள்  மட்டுமன்றி தங்க நாணயம், வெள்ளி நாணயம் ஆகியவையும் பல்வேறு அளவுகளில்  தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

 கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு அட்சய திருதியை வியாபாரம் நன்றாக இருக்கும் என நகைக் கடை உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அவர்கள் பல  காரணங்களைக் கூறுகின்றனர். கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு மக்களிடம் பணப்  புழக்கம் நன்றாக உள்ளது. மேலும், இந்தாண்டு அட்சய திருதியை ஞாயிற்றுக்கிழமை  வருவதால், அதிகமான மக்கள் நகைக் கடைக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக  திருநெல்வேலியை சேர்ந்த நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 இந்த எதிர்பார்ப்பு காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும், அதிகமாக தங்க  நகைகளையும், நாணயங்களையும் வாங்கி இருப்பு வைத்திருப்பதாக அவர்கள்  தெரிவிக்கின்றனர். அரை கிராம், ஒரு கிராம், 2 கிராம், 4 கிராம், 8 கிராம் தங்க நாணயங்கள் கூடுதலாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 "அட்சய திருதியையன்று மட்டும் விற்பனை செய்வதற்காக சுமார் 6 டன் தங்கம்  தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஒரு டன் அதிகமாகும். இதில் 80 சதவிகிதம் கே.டி.எம். தங்க நகைகளாகவும், தங்க நாணயங்களாவும் விற்பனை செய்யப்படவுள்ளன. சாதாரண நாள்களில் ரூ.3 லட்சம் விற்பனை  நடைபெறும் கடைகளில், இந் நாளில் ரூ.30 லட்சம் வரை வியாபாரம் நடைபெறுகிறது. இருப்பினும் நகைக் கடைகளில் ஏற்படும் போட்டியின் காரணமாக, சாதாரண  நாள்களில் கிடைக்கும் லாபத்தை அட்சய திருதியை நாளில் பெற முடிவதில்லை' என்றார் தமிழ்நாடு வெள்ளி, தங்கம், வைர வியாபாரிகள் சம்மேளன மாநில துணைத்  தலைவர் சோம. திருநாவுக்கரசு.

 மக்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் மற்றும் அட்சய திருதியையன்று தங்கம்  வாங்கினால் நன்மை கிட்டும் என்ற என்ற நம்பிக்கை போன்றவற்றால், அட்ச திருதியை  வியாபாரம் அமோகமாக இருக்கும் என நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விலை உயரும்...!

கடந்த ஆண்டு அட்சய திருதியையின்போது தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1,400  இருந்தது. ஆனால் வியாழக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1,720 ஆக  இருந்தது. இந்த விலை, அட்சய திருதியையன்று மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக  தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 வெள்ளியின் விலையும் கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடும்போது பல மடங்கு  அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ.23,000 ஆக இருந்த வெள்ளி, வியாழக்கிழமை ரூ.31,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT