திருநெல்வேலி

"ஸ்கூல் பேக்' விலை 20% வரை உயர்வு

திருநெல்வேலி, மே 29: பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் எழுதுபொருள்களின் விலை 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பைகளின் விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பொர

கே.வாசுதேவன்

திருநெல்வேலி, மே 29: பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் எழுதுபொருள்களின் விலை 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக பைகளின் விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பொருள்கள் விற்பனை ஒரு வாரமாக விறுவிறுப்பை அடைந்துள்ளது. நிகழாண்டில் பெரும்பாலான பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும், நம் நாட்டு பொருள்களை விட, சீன தயாரிப்பு பொருள்கள் அதிகம் விற்பனைக்கு வந்துள்ளன. அவை மக்களை எளிதில் கவர்கின்றன.

பள்ளி மாணவர்களுக்கு ரூ.200-ல் இருந்து ரூ.1,750 வரை 300 வகைகளில் பைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் ரூ.300-ல் இருந்து ரூ.500 வரை விலையுள்ள பைகளே அதிகம் விற்பனையாகின்றன. பைகளின் விலை 5 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. படங்களுடனும், நல்ல தரத்துடன் பைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

ஒரு நிறுவனம் தங்களது பைகளுக்கு 18 மாதங்கள் வாரண்டி வழங்குகிறது.

பல புதிய வடிவில் "ஜியோமெட்ரி பாக்ஸ்கள்' விற்பனைக்கு வந்துள்ளன.

இதில் வெப்பமானி, கடிகாரம், கால்குலேட்டர், சுவிட்ச் மூலம் இயங்கும் பாக்ஸ்கள் என பல வகைகளில் விற்கப்படுகின்றன.

இதில் கடிகாரம் உள்ள பாக்ஸ் ரூ.100, வெப்பமானி பாக்ஸ் ரூ.225, கால்குலேட்டர் பாக்ஸ் ரூ.165, சூட்கேஸ் போன்று நம்பர் லாக் பாக்ஸ் ரூ.75 என 10-க்கும் மேற்பட்ட வகைகளில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சீனத் தயாரிப்புகளே ஆகும். விலையும் 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ், லஞ்ச் பேக் ஆகியவற்றின் விலை 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இவற்றில் கடந்த ஆண்டு ரூ.10-க்கு விற்கப்பட்ட அரை லிட்டர் தண்ணீர் பாட்டில், தற்போது ரூ.20-க்கு விற்கப்படுகிறது. இதேபோல ஒரு லிட்டர் பாட்டிலும் ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ.22-க்கும் விற்கப்படுகிறது. மேலும் காலணிகள், சாக்ஸ் ஆகியவற்றின் விலையும் 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன.

விலை உயர்வு குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு வியாபாரி கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலையும், அதைச் சார்ந்த மூலப் பொருள்களின் விலையும் உயர்ந்ததால் ஸ்கூல் பேக், பிளாஸ்டிக் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன என்றார் அவர்.

பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுகளின் விலை உயரவில்லை. கடந்த ஆண்டு விலையிலேயே விற்கப்படுகிறது. 160 பக்கங்கள் கொண்ட தரம்மிக்க நோட்டு ரூ.18, 192 பக்கங்கள் கொண்ட நோட்டு ரூ.20 என்ற விலையில் விற்கப்படுகின்றன.ஆனால் பென்சில், பேனா, பிரவுன் சீட் உள்ளிட்ட மாணவர்கள் பயன்படுத்தும் எழுதுபொருள்களின் விலை 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக பாளையங்கோட்டையில் உள்ள புத்தக கடை உரிமையாளர் தெரிவிக்கிறார்.

பள்ளி மாணவர்களின் நோட்டுகளுக்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே புத்தக கடை உரிமையாளர்கள் ஆர்டர்கள் கொடுத்துவிடுவோம். இதனால் அப்போது என்ன விலை இருந்ததோ, அந்த விலையில்தான் நோட்டுகளின் விலை நிர்ணயிக்கப்படும்.

அதன்படிதான் தற்போது நோட்டுகள் விற்கப்படுகின்றன என்றார் அவர்.தனியார் பள்ளிகளின் கருணையற்ற கட்டணத்தால் விழிபிதுங்கிய நிலையில் உள்ள பெற்றோர்களுக்கு, இப் பொருள்களின் விலை உயர்வும் சிரமத்தை அதிகரித்துள்ளது.

வியாபாரம் 25 சதவிகிதம் குறைவு: மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பெரும்பாலானவை மொத்தமாக நோட்டு, பென்சில், பேனா போன்றவற்றை ஆர்டர் செய்து வாங்கி கொடுத்துவிடுவதால், அவற்றின் வியாபாரம் புத்தகக் கடைகளில் குறைந்து வருகிறது.

குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் புத்தகக் கடைகளில் அவற்றின் விற்பனை 25 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT