திருநெல்வேலி

தரம் குறைந்த டியூப்: தடுமாறும் அரசு பஸ்கள்

திருநெல்வேலி,அக்.14: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் உள்ள பஸ்களில் பயன்படுத்தப்படும் தரம் குறைந்த டியூப்களால் டயர் பஞ்சர், டயர் வெடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அத

கே.வாசுதேவன்

திருநெல்வேலி,அக்.14: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் உள்ள பஸ்களில் பயன்படுத்தப்படும் தரம் குறைந்த டியூப்களால் டயர் பஞ்சர், டயர் வெடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதாக புகார் கூறப்படுகிறது.

  இப் பிரச்னையால் தினமும் சுமார்

50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் தினமும் சுமார் 2 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.

  திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் 14 பணிமனைகள் உள்ளன. இவற்றில் சுமார் 350 நகர பஸ்கள் உள்பட 963 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நீண்ட தொலைவு ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 அண்மைக்காலமாக அரசு பஸ்கள் நடுவழியில் பழுதாகி நிற்பது அதிகரித்து வருகிறது. டயர் பஞ்சர், டயர் வெடிப்பு ஆகியவற்றால் பஸ்கள் பழுதாகி நடுவழியில் நிற்கின்றன.

 இதற்கு, தரம் குறைந்த டியூப்கள் பயன்படுத்துவதே பிரதான காரணம் என அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் டயர் தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 அரசு பஸ்களுக்கு டயர், டியூப், பிளாப் ஆகியவை மொத்தமாக வாங்கப்படுகின்றன. டயர் மட்டும் ஐ.எஸ்.ஐ. தர முத்திரை பெற்ற இரு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படுகின்றன. ஆனால், டியூப் வாங்குவதில் இது பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

  புதிய டியூப்களை குறைந்தது 10 ஆயிரம் கி.மீ. பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், தரம் குறைந்த டியூப்கள் பயன்படுத்தப்படுவதால், அவை சில ஆயிரம் கிலோ மீட்டரிலே காலாவதியாகி விடுவதாக டயர் தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 மேலும் இந்த டியூப்கள் சில பஞ்சர் ஒட்டும்போதே கிழிந்துவிடுவதாகவும் அப் பிரிவு ஊழியர்கள் கூறுகின்றனர்.

  டயர் பழுதாவதால் அதை சரி செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர். அது மட்டுமன்றி புதிய டியூப்கள் வெடித்தால், அதற்கு அந்த பஸ் ஓட்டுநர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் ஒருவித அச்ச உணர்வுடனே பஸ்ûஸ இயக்கும் நிலை உள்ளது.

 மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டயர்களை புதுப்பிக்கும் பிரிவு தனியாரிடம் ஒப்பந்தம் அடிப்படையில் விடப்பட்டிருப்பதால், அவை சரியான முறையில் புதுப்பிக்கப்படுவதில்லை என ஊழியர்கள் கூறுகின்றனர்.

  போக்குவரத்துக் கழகத்துக்கு தொழில்நுட்ப ஊழியர்கள் நியமித்து 15 ஆண்டுகளுக்கும் மேலாவதால், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், பஸ்களை பழுது நீக்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தொழில்நுட்ப ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

  அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் இப் பிரச்னையைத் தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

 தரமான டியூப்களை பயன்படுத்த போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT