தாமிரபரணியில் மணல் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல்
தூத்துக்குடி, ஜன. 8: தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதித்து உயர் ந
தூத்துக்குடி, ஜன. 8: தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனால், தாமிரபரணி முழுவதும் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்க போலீஸôர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முறப்பநாடு அருகே காலாங்கரை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு லாரிகளில் கடத்தப்படுவதாக போலீஸôருக்கு தகவல்
கிடைத்தது.
அதன்பேரில் வெள்ளிக்கிழமை மாலை முறப்பநாடு ஆய்வாளர் ரவி தலைமையில் போலீஸôர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு இரண்டு லாரிகள் வந்தன.
இதைக் கண்டதும் போலீஸôர் அந்த லாரிகளை மடக்கி நிறுத்தினர். உடனே டிரைவர்கள் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து தலா ஒன்றரை யூனிட் மணலுடன் 2 லாரிகளையும் போலீஸôர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக முறப்பநாடு போலீஸôர் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவர்களான கலியாவூரைச் சேர்ந்த சிவசுப்பு மகன் காளியாண்டி (35), ராமசாமி மகன் ராமசுப்பு (30) ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.