முகப்பு
திருநெல்வேலி

மாநகராட்சியைக் கண்டித்து சமக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜன. 8: தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் ராஜாஜி பூங்கா முன்பு

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

தூத்துக்குடி, ஜன. 8: தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் ராஜாஜி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலர் பி.எம். அற்புதராஜ் தலைமை வகித்தார்.

 மாநில பொதுக்குழு உறுப்பினர் பி. கனிராமன், மாநகர அவைத் தலைவர் டி. விஜயகுமார், துணைச் செயலர்கள் டி. பொன்வேல், பி. அர்ஜூன், கே. வெற்றிவேல், பொருளாளர் பி. அருண் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 கட்சியின் மாவட்டச் செயலர் என். சுந்தர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.

மாவட்ட அவைத் தலைவர் என்.பி.டி. பாலா,  மாவட்ட துணைச் செயலர்கள் ஏ.எம். ராஜேஷ், எஸ்.கே. மலர்விழி,  மாவட்ட இளைஞரணிச் செயலர் எம்.எக்ஸ். வில்சன், வர்த்தக அணிச் செயலர் கே.ஜே. பிரபாகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி. கண்டிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக உடைக்கப்பட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

 தூத்துக்குடி தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகள், நாய்கள் மற்றும் மாடுகளால் சுகாதார சீர்கேடும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே, அவைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி பகுதியில் விடுபட்ட அனைவருக்கும் கலர் டி.வி. வழங்க வேண்டும்.

 தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →