மாணவர்களுக்கு இலவச குடை அளிப்பு
கோவில்பட்டி, ஜன. 8: எட்டையபுரம் தெற்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச குடை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, நன்கொடையாளர் கோவிந்தராஜ், கோவில்பட்டி உதவித் தொட
கோவில்பட்டி, ஜன. 8: எட்டையபுரம் தெற்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச குடை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, நன்கொடையாளர் கோவிந்தராஜ், கோவில்பட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத் மாணவ, மாணவிகளுக்கு இலவசக் குடைகளை வழங்கிப் பேசினார்.
பள்ளித் துணை ஆய்வாளர் விஜயன், தெற்கு செமப்புதூர் பள்ளி ஆசிரியர் சீனிவாசன், செங்குந்தர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளித் தலைமையாசிரியர் காந்திராஜ் வரவேற்றார். ஆசிரியை முருகவேணி நன்றி கூறினார்.