திருநெல்வேலி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு

கோவில்பட்டி, ஜூன் 4: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவில்பட்டி நகரக் குழு மாநாடு மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  கோவில்பட்டி நகரத் தலைவர் முருகலட்சுமி தலைமை வகித்தார். முன்னாள்

தினமணி

கோவில்பட்டி, ஜூன் 4: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவில்பட்டி நகரக் குழு மாநாடு மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

 கோவில்பட்டி நகரத் தலைவர் முருகலட்சுமி தலைமை வகித்தார். முன்னாள் மாதர் சங்கத் தலைவர் தனலட்சுமி சங்க கொடி ஏற்றினார்.

 மாநில துணைத் தலைவர் மல்லிகா மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். நகரச் செயலர் விஜயலட்சுமி வேலையறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டில் 19 பேர் கொண்ட புதிய நகரக் குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவில்பட்டி புதிய குடிநீர்த் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து நிர்வாக அனுமதி பெற்று திட்டப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

 கோவில்பட்டி நகரில் சமையல் எரிவாயு விநியோகத்துக்கு 45 நாள்கள் ஆகிறது. அதை ஒரு வாரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 முன்னதாக, நகர துணைச் செயலர் முத்துலட்சுமி வரவேற்றார். மாவட்டச் செயலர் ருக்மணி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

SCROLL FOR NEXT