ஓய்வுபெற்ற ஊழியர் நலச் சங்கக் கூட்டம்
சுத்தமல்லியில் வட்டார ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
சுத்தமல்லியில் வட்டார ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
மூத்த உறுப்பினர் ஆர். மார்த்தாண்டம் தலைமை வகித்தார். செயலர் அ. சுதந்திரக்கனி வரவேற்றார். பொருளாளர் எஸ். பண்டாரம் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்தார். ஏ. கந்தசாமி, வெ. காளியப்பன், மா. பட்டாணி, எஸ். ஆறுமுகம், ஆர். சாமுவேல் மோகன்தாஸ், கே.எஸ். ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சுத்தமல்லி ஊராட்சிப் பகுதியில் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வி. பொன்னுச்சாமி நன்றி கூறினார்.
Advertisement
Advertisement