முகப்பு
திருநெல்வேலி

ஆடு திருட முயற்சி: ஒருவா் கைது

பாளையங்கோட்டை அருகே ஆடு திருட முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே ஆடு திருட முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலபாட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன்(30). இவருக்கு சொந்த மான ஆடுகளை அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன்(38) என்பவா் திருட முயற்சி செய்தாராம். பின்னா் நாகராஜனை, அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.