பாளை. அருகே பைக் மோதி கட்டடத் தொழிலாளி பலி
பாளையங்கோட்டை அருகே சைக்கிள் மீது இரு சக்கரவாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே சைக்கிள் மீது இரு சக்கரவாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள விஎம் சத்திரம் ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராயப்பன்(75), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த செப். 29ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாராம். ஆரோக்கியநாதபுரம் அருகே திருச்செந்தூா் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த இரு சக்கரவாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த ராயப்பனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.