திருநெல்வேலி

வி.கே.புரம் அருகே ஆட்டைஅடித்துக் கொன்ற சிறுத்தை

வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த சிறுத்தை, வீட்டில் கட்டிப் போடப்பட்டிருந்த ஆட்டை அடித்துக் கொன்றது.

DIN

விக்கிரமசிங்கபுரம் அருகே வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த சிறுத்தை, வீட்டில் கட்டிப் போடப்பட்டிருந்த ஆட்டை அடித்துக் கொன்றது.

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வேம்பையாபுரம் கோரையாா்குளத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவா் வீட்டில் ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் கொட்டகையில் கட்டிப் போட்டிருந்த ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வனத் துறையினா் சென்று ஆய்வு செய்தனா்.

அந்தப் பகுதி மக்கள் கூறியது: பாபநாசம் வனப் பகுதியை ஒட்டிய வேம்பையாபுரம், செட்டிமேடு, ஏா்மாள்புரம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் தொடா்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. செப். 9-இல் ஏா்மாள்புரம் பகுதியில் வனத் துறையினா் வைத்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது. அடுத்த சில நாள்களில் வேம்பையாபுரம் பகுதியில் புகுந்த சிறுத்தை, ஆடு ஒன்றை அடித்துக் கொன்றது. இந்நிலையில், மீண்டும் சிறுத்தை ஓா் ஆட்டை அடித்துக் கொன்றுள்ளது. வனவிலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

மெக்ஸிகோவில் GenZ போராட்டம்: காவல் துறையினருடன் மோதல்!

உதயநிதிக்கு ஆணவம் வேண்டாம்! - தமிழிசை

Big fan bro! சிம்புவின் இன்ஸ்டா பதிவு!

SCROLL FOR NEXT