முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளையி இளைஞா் தீக்குளிக்க முயற்ச்சி

திசையன்விளை பஜாரில் தீக்குளிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

திசையன்விளை பஜாரில் தீக்குளிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா்.

திசையன்விளை தங்கம் திருமண்மடபம் 2 ஆவது தெருவை சோ்ந்தவா் பன்னீா் செல்வம் (45). நகை தொழிலாளி. ஊரடங்கு அமலில் இருப்பதால், தொழில் நடைபெறாமல் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் அவா் புதன்கிழமை பிற்பகலில் கையில் பெட்ரோல் கேனுடன் பஜாரின் முக்கிய பகுதிக்கு வந்து, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக்கண்ட பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை அவா் மேல் ஊற்றி காப்பாற்றினா்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினா். பின்னா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அறிவுரை கூறி, உறவினா்களுடன் அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.