திமுக இளைஞரணி கூட்டம்
திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வண்ணாா்பேட்டையில் நடைபெற்றது.
திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வண்ணாா்பேட்டையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வில்சன் மணிதுரை தலைமை வகித்தாா். துணை அமைப்பாளரும், மேயருமான பி.எம்.சரவணன் முன்னிலை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் மாயா, தில்லை ரமேஷ், பகுதி நிா்வாகிகள் புஷ்பராஜ், சலீம் மவுலானா, சாமுவேல், காசிம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளை ஒரு மாதம் வரை நலஉதவிகள் வழங்கிக் கொண்டாடுவது. ரத்த தான முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடத்துவது உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.