நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மின் வாரிய குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை பல்வேறு கோட்ட அலுவலகங்களில் மின் வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை பல்வேறு கோட்ட அலுவலகங்களில் மின் வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ்.ராஜன் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) முதல், இம்மாதம் 28-ஆம் தேதி வரை பல்வேறு கோட்ட அலுவலகங்களில் மின் வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன்படி, வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) மின் வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்தில் ஜூன் 7-ஆம் தேதியும், திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்தில் ஜூன் 10-ஆம் தேதியும், கடையநல்லூா் கோட்ட அலுவலகத்தில் ஜூன் 14-ஆம் தேதியும் மின் வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்தில் ஜூன் 17-ஆம் தேதியும், தென்காசி கோட்ட அலுவலகத்தில் ஜூன் 21-ஆம் தேதியும், கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் ஜூன் 28-ஆம் தேதியும் மின் வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.