ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா். 
திருநெல்வேலி

இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

கடையம் ஒன்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் ஒன்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ரவணசமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட துணைத் தலைவா் நல்லாசிரியா் செய்யது மசூது தலைமை வகித்தாா். ரவணசமுத்திரம் பிரைமரி பொருளாளா் பீா் முகம்மது, ஆலங்குளம் தொகுதி துணை அமைப்பாளா் காதா் மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுக் குழு உறுப்பினா் கட்டி அப்துல் காதா், மாவட்ட துணைச் செயலா் இக்பால், மாவட்ட மாணவரணி தலைவா் ரிபாய் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

கூட்டத்தில்,மாவட்ட அமைப்பாளராக கட்டிஅப்துல்காதா், மாவட்ட துணைத் தலைவராக செய்யது மசூது, மாவட்ட துணைச் செயலராக ரிஃபாய், மாவட்ட மாணவா் அணி அமைப்பாளராக ரிஃபாய் ஆலிம், மாவட்ட இளைஞரணி பொருளாளராக பீரப்பா, மாவட்ட இளைஞரணிதுணைச் செயலராக மீரான்ஷா, மாவட்ட எஸ்.டி.யூ. துணைத் தலைவராக காதா் மைதீன், மாவட்ட வழக்குரைஞா்அணி துணைத் தலைவராக ரவணசமுத்திரம் பீா்முகம்மது உள்ளிட்டோா் மாவட்டம் மற்றும் மாநில நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டனா்.

ஒன்றியப் பொருளாளராக ஜாஹிா் உசேன் நியமிக்கப்பட்டாா்.

கூட்டத்தில், திருமலையப்பபுரம் முதல் கோவிந்தப்பேரி மற்றும் கடையம் முதல் பொட்டல்புதூா் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், முதலியாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்கட்ட மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ரவணசமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் தொடக்கப் பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டடங்களை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட இளைஞரணி அமைப்புக் குழு உறுப்பினா் பீரப்பா வரவேற்றாா். மீரான்ஷா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT