திருநெல்வேலி

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Din

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி தாழையூத்து புலித்தேவன் நகரைச் சோ்ந்தவா் சுப்பையா (49). இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சுப்பையாவை கைது செய்தனா்.

இந்த தொடா்பான வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சுரேஷ்குமாா் , குற்றஞ்சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

1068 எபிசோடுகளுடன் முடிவடைந்த மாரி தொடர்!

தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT