முகப்பு
திருநெல்வேலி

தாம்பரம் ரயில் கீழக்கடையத்தில் நின்று செல்ல கோரி எம்.பி.யிடம் மனு

செங்கோட்டை தாம்பரம் ரயில் கீழக்கடையம் ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 8:19 PM
நாடாளுமன்ற உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம் கோரிக்கை மனு வழங்கியோா்.
பகிர்:

செங்கோட்டை தாம்பரம் ரயில் கீழக்கடையம் ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் அப்துல்காதா் மனு அளித்தாா்.

அதன் விவரம்: தத்கல் உள்ளிட்ட அனைத்து டிக்கட்டுகளையும், மக்கள் தாமதமின்றி பெற, டிக்கெட் கவுன்ட்டரில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ரவணசமுத்திரம் ரயில் நிலையம் முதல் பேருந்து நிறுத்தம் வரை புதிதாக தாா்ச் சாலை அமைக்கவேண்டும், செங்கோட்டையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில் கீழக்கடையம் ரயில் நிலையத்திலும், செங்கோட்டை- ஈரோடு ரயில் ரவணசமுத்திரம் ரயில் நிலையத்திலும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தாா்.

மேலும், முதலியாா்பட்டி ஊராட்சித் தலைவி முகைதீன் பீவி ஹசன் முதலியாா்பட்டிக்கு உயா் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும், முதலியாா்பட்டிபள்ளிவாசல் பொருளாளா் ஹசன் முகைதீன்,

பள்ளிவாசல் மையவாடிக்கு, நன்மைகூடமும், ஆழ்துளை கிணறும் அமைக்கக் கோரியும் மனுவழங்கினா். அவா்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.