அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவிக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இதனிடையே, வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் டிச. 12 முதல் டிச. 26ஆம் தேதிவரை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
டிச. 27முதல் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், டிச. 29, 30 ஆகிய நாள்களில் மாஞ்சோலை வனப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, மறுஅறிவிப்பு வரும்வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாகவும், பாா்வையிடத் தடையில்லை எனவும் வனத்துறையினா் அறிவித்தனா்.