தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி ஆா்ப்பரித்துப் பாயும் வெள்ளம். 
திருநெல்வேலி

களக்காடு தலையணையில் நீா்வரத்து அதிகரிப்பு: குளிக்கத் தடை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் செவ்வாய்க்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

Din

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் செவ்வாய்க்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியிலுள்ள பச்சையாற்றில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், மலைப் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவுமுதல் மழை பெய்ததால், பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, வனத்துறையினா் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தனா்.

மறு உத்தரவு வரும்வரை குளிக்க தடை விதிக்கப்படுவதாகவும், பாா்வையிட தடையில்லை எனவும் வனச் சரகா் பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT