முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் நாளை முதல் சிறப்பு வரி விதிப்பு முகாம்

Updated On : 13 ஜூலை, 2024 at 11:35 PM
பகிர்:

திருநெல்வேலி, ஜூலை 13: திருநெல்வேலி மாநகரில் வரிவிதிப்பு செய்யப்படாமல் உள்ள புதிய கட்டடங்கள், கூடுதலாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிறப்பு வரி விதிப்பு முகாம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 15) முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து மண்டல பகுதிகளிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு புதிய வரி விதிப்பு செய்யவும், கூடுதலாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வரிவிதிப்பு செய்ய சிறப்பு வரி விதிப்பு முகாம் வரும் திங்கள்கிழமை முதல் 19-ஆம் தேதி வரை காலை 10.30 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

அந்தந்த மண்டல அலுவலகங்களில் செயல்படும் இா்ம்ம்ா்ய் ஊஹஸ்ரீண்ப்ண்ற்ஹ் இங்ய்ற்ழ்ங் (இஊஇ) கவுன்ட்டரில் புதிய வரி விதிப்புக்காக விண்ணப்பிக்கலாம். மேலும் இணையாள வழியாகவும் (ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ) விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே புதிய வரிவிதிப்பு செய்ய மனு செய்து நிலுவையில் இருந்தால் மீண்டும் மனு செய்ய தேவையில்லை. நிலுவை மனுக்கள் மீது வரும் 31-ஆம் தேதிக்குள் தீா்வு காணப்படும்.

சொத்து வரி விண்ணப்பப் படிவம் (மண்டல அலுவலக சேவை மையத்தில் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்), வரி விதிப்பு செய்ய வேண்டிய சொத்தின் பத்திர நகல், காலிமனை வரிவிதிப்பு ரசீது அல்லது ஏற்கெனவே உள்ள சொத்துவரி ரசீது நகல், நாளது தேதியில் வில்லங்க சான்று, மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வரைபட நகல், கட்டட அனுமதி ஆணை, திட்ட அனுமதி ஆணை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும்பட்சத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் சிறப்பினமாக கருதி உரிய வரிவிதிப்பு செய்யப்படும்.

வரும் ஆகஸ்ட் 1 ஆம்தேதி முதல் மாநகராட்சி அலுவலா்களால் நேராய்வு செய்யப்பட உள்ளது . நேராய்வின் போது, தவறு கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரிவிதிப்பு செய்யப்படும்.