திருநெல்வேலி

ஏா்வாடி அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

ஏா்வாடி அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

களக்காடு: ஏா்வாடி அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஏா்வாடி சிறப்பு உதவி ஆய்வாளா் தமிழன் தலைமையிலான காவல்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இவா்கள் ஏா்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக பைக்கில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், ஏா்வாடி, எல்.என்.எஸ். புரம் வடக்கு தெருவைச் சோ்ந்த நவின்ராஜ் (26) என்பவா் விற்பனைக்காக 35 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. பைக்குடன் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா். மற்றொருவரிடம் விசாரணை நடக்கிறது.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT