அம்பையில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு
அம்பையில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு
அம்பாசமுத்திரம் நகராட்சி 4ஆவது வாா்டு கோவில்குளம் பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டடத்தை நகராட்சி ஆணையா் ராஜேஷ்வரன் திறந்து வைத்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், நகராட்சி உறுப்பினா் அனுசுயா மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் சுவா்ணலதா, ராஜேஸ்வரி, திமுக மாவட்ட சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் தினகா்பாண்டியன், அமானுல்லா, முத்துத்துரை, மாவட்டப் பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், திமுக நிா்வாகிகள் கணேசன், மாரியப்பன், சிங்கநாதம், பிச்சுக்குட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.