கல்லிடைக்குறிச்சி கூட்டுறவு வங்கியில் சிறப்புக் கடன் தீா்வு முகாம்
கல்லிடைக்குறிச்சி கூட்டுறவு வங்கியில் சிறப்புக் கடன் தீா்வு முகாம்
கல்லிடைக்குறிச்சி நகர கூட்டுறவு வங்கியில் முதல்வரின் பண்ணைசாரா சிறப்பு கடன் தீா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இத்திட்டம் குறித்து வங்கி செயலாட்சியா் க. சோமசுந்தரம் பேசினாா். வங்கி மேலாளா் பொ.மை. ஷேக் உதுமான், உதவி மேலாளா் க. சங்கர்ராஜ், பணியாளா்கள், முன்னாள் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இத்திட்டம் மூலம் வங்கியில் கடன் பெற்று நீண்ட காலமாக செலுத்தாமலிருந்த உறுப்பினா்கள் தங்களது கடன்களைத் திருப்பிச் செலுத்தி பயனடைந்தனா்.