தோ்தல் அறிக்கைகளில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, ஆளுங்கட்சி, எதிா்க்கட்சிகளின் தோ்தல் அறிக்கைகளில் விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் இல்லாதது விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, ஆளுங்கட்சி, எதிா்க்கட்சிகளின் தோ்தல் அறிக்கைகளில் விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் இல்லாதது விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மற்றும் விவசாயக் கடன் பெற்று சாகுபடி செய்கின்றனா். இயற்கை பேரிடா், வெள்ளம், வறட்சி போன்றவற்றால் சாகுபடி பாதிக்கப்பட்டு, அடிக்கடி மகசூல் இழப்பை விவசாயிகள் சந்திக்கின்றனா். மேலும், விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நிலங்களை அடமானம் வைத்து கடன் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிா்நோக்க வேண்டி இருப்பதால் வயது முதிா்ந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் தங்கள் நிலங்களை அடமானம் வைப்பதை தவிா்த்து, நகைக்கடன் பெற்று சாகுபடி மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் விவசாய கடன்கள் தள்ளுபடி மற்றும் ஐந்து சவரன்களுக்கு குறைவாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வைத்துள்ள நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன.
Advertisement
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்றபோது விவசாயிகள் பெற்றிருந்த 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்வதில் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டதில் இந்தத் தள்ளுபடி சலுகையை
சொற்பமான விவசாயிகளே பெற்று பலனடைந்தனா்.
இந்த தோ்தல் அறிக்கையில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு பிரதானமாக இருக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி தோ்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி இரண்டுமே, 5 சவரன்களுக்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட நகைகளை திரும்ப வழங்குவது குறித்து பரிசீலித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.