‘மாா்ச் 31 வரை விடுமுறையின்றி வரிவசூல் மையங்கள் செயல்படும்’
திருநெல்வேலி மாநகராட்சியில் இம் மாதம் 31 ஆம் தேதி வரை வரிவசூல் மையங்கள் விடுமுறையின்றி செயல்படும்
திருநெல்வேலி மாநகராட்சியில் இம் மாதம் 31 ஆம் தேதி வரை வரிவசூல் மையங்கள் விடுமுறையின்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம் மாநகராட்சிக்கு 2023 -24 ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, பாதாளச் சாக்கடை சேவைக்கட்டணம், வரியில்லா இனங்கள், கடைகளின் வாடகை போன்றவைகளை செலுத்துவதற்கான காலம் இம் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. ஆகவே, வரிகளை பொதுமக்கள் செலுத்த ஏதுவாக வெள்ளிக்கிழமை முதல் இம் மாதம் 31 ஆம் தேதி வரை மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 7 முதல் இரவு 10 மணி வரை விடுமுறையின்றி செயல்படும். இதை பயன்படுத்தி 2023-24 ஆம் ஆண்டுக்கான வரியினங்களை உடனடியாக செலுத்தி மாநகராட்சியிலிருந்து உரிய ரசீது பெற்றுக்கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.