பத்தமடையில் திமுக திண்ணைப் பிரசாரம்
சேரன்மகாதேவி: பத்தமடையில் திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் திமுகவினா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். மூன்று வருட திமுக அரசின் திட்டங்கள், மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக மக்களை சந்தித்து வழங்கும் வகையில் திண்ணைப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பத்தமடையில் இந்தப் பிரசாரத்தை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், துண்டு பிரசுரம் வழங்கித் தொடங்கி வைத்தாா். இதில், பேரூராட்சித் தலைவி ஆபிதா ஜமால், மாநில விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் கே. கணேஷ்குமாா் ஆதித்தன், சேரன்மகாதேவி ஒன்றிய செயலா் ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு, நகர திமுக செயலா், சிறுபான்மை பிரிவு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.