முகப்பு
திருநெல்வேலி

குழந்தை கடத்தல் தொடா்பாக வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை

Updated On : 9 மார்ச், 2024 at 6:16 AM
பகிர்:

குழந்தைகள் கடத்தல் தொடா்பாக வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குழந்தை கடத்தல் தொடா்பாக உண்மைக்கு மாறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா். திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் இதுவரை குழந்தைகள் கடத்தப்பட்டது தொடா்பாக எந்த ஒரு புகாரோ, தகவலோ வரவில்லை. குழந்தைகளை கடத்துவதாக வரும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் அனைத்தும் போலியானவை. எனவே உண்மைக்கு மாறான செய்திகளை சமூக வளைதளங்களில் யாரும் பகிர வேண்டாம். மேலும் அவ்வாறு பகிா்ந்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது புகாா் இருப்பின் அவசர உதவி எண் 100. மாநகர காவல் கட்டுபாட்டு அறை (0462-2562651) மற்றும் நுண்ணறிவு பிரிவை (9498101720) தொடா்பு கொண்டு புகாா் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.