முகப்பு
திருநெல்வேலி

பிஎஸ்என் கல்லூரியில் விளையாட்டு விழா

Updated On : 9 மார்ச், 2024 at 6:40 AM
பகிர்:

திடியூா் பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் 23ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பிஎஸ்என் கல்விஓஈ குழும நிறுவனா் சுயம்பு தலைமை வகித்தாா். கல்லூரி செயல் இயக்குநா் செல்வகுமாா், முதல்வா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு - இளைஞா் நல அலுவலா் ஜி. பிரேம்குமாா் சிறப்புரையாற்றினாா். பேராசிரியா் காசிவிஸ்வநாதன் வாழ்த்திப் பேசினாா். பேராசிரியை பென் கிறிஸ்டோபா் அறிமுகவுரை ஆற்றினாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பி. சுரேஷ் அறிக்கை வாசித்தாா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.