முகப்பு
திருநெல்வேலி

ரமலான் பிறை தென்பட்டால் தகவல் அளிக்க வேண்டுகோள்

Updated On : 9 மார்ச், 2024 at 10:12 PM
பகிர்:

ரமலான் பிறை தென்பட்டால் தகவல் அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி சந்திப்பு ஜூம்ஆ பள்ளிவாசல் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி சந்திப்பு ஜும்ஆ பள்ளிவாசலை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி கூட்டம் இம் மாதம் 11 ஆம் தேதி நடத்தப்பட்டு, தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்கப்பட உள்ளது. ஆகவே, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இஸ்லாமியா்கள் எந்த ஊரில் ரமலான் பிறை தென்பட்டாலும் 0462-2330897 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.