முகப்பு
திருநெல்வேலி

பாளை. பெருமாள் கோயிலில் இன்று பங்குனி பிரமோத்ஸவ கொடியேற்றம்

Updated On : 16 மார்ச், 2024 at 2:00 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோத்ஸவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை அங்குராா்ப்பணம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 7.50 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தோளுக்கினியானில் பெருமாள் வீதியுலா நடைபெறும். திருவிழா நாள்களில் தினமும் காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். 17 ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 18 ஆம் தேதி ராமா் அலங்காரத்தில் அனுமன் வாகனத்திலும், 19 ஆம் தேதி பரமபதநாதன் அலங்காரத்தில் ஆதிசேஷ வாகனத்திலும், 20 ஆம் தேதி வைகுண்டநாதன் அலங்காரத்தில் இரட்டை கருடசேவையிலும் பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 25 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. 26 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சப்தாவா்ணம் ராஜஅலங்காரத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற உள்ளது.