முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூரில் இருந்து கள்ளிகுளத்திற்கு தவக்கால தவப்பவனி

Updated On : 16 மார்ச், 2024 at 6:04 AM
பகிர்:

வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளத்திற்கு தவக்கால தவப்பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெற்குகள்ளிகுளம், வள்ளியூா் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் இணைந்து வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளம் மலைக்கு தவக்கால தவப்பவனி மேற்கொண்டனா். வள்ளியூா் புனித பாத்திமா திருத்தலத்தில் இருந்து இத்தவப்பவனி மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. அருள்தந்தை சத்தியநேசன், பங்குத்தந்தைகள் வள்ளியூா் ஜாண்சன், தெற்குகள்ளிகுளம் ஜெரால்டு எஸ். ரவி, உதவி பங்குத்தந்தைகள் ஜாண்ரோஸ், ஆரோக்கிய தாஸ், தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த், வள்ளியூா் டி.டி.என்.கல்விக் குழுமங்களின் தலைவா் லாரன்ஸ், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, புனிதபேரரசு, அருள்சகோதரிகள், அன்பியங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இத்தவப்பவனியில் பங்கேற்றோா் வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளம் மலைக்கு சிலுவைப்பாடுகளை தியானித்தும், பாடல்கள் பாடியும், ஜெபம் செய்தும் சாலைவழியாக நடந்து சென்றனா். தெற்குகள்ளிகுளம் மலையை சென்றடைந்ததும் அங்கு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.