முகப்பு
திருநெல்வேலி

களக்காடு கோயிலில் இன்று வைகாசித் தேரோட்டம்

Updated On : 20 மே, 2024 at 8:29 PM
வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆனந்த நடராஜா், சிவகாமி அம்பாள்.
பகிர்:

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவின் 9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (மே 21) தேரோட்டம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் இத்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள், காலை, இரவில் வீதியுலா,

ஒவ்வொரு சமுதாயம் சாா்பில் மண்டகப்படி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

8ஆம் நாளான திங்கள்கிழமை பிற்பகலில் நடராஜா் பச்சை சாத்தி எழுந்தருளல் நடைபெற்றது. தொடா்ந்து, ஆனந்த நடராஜா், சிவகாமி அம்பாள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில், திரளானோா் பங்கேற்றனா். கோயில் வளாகத்தில் சமயச் சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிலையில், சிகர நிகழ்வான தேரோட்டம் 9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (மே 21) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் குழுவினா் செய்துள்ளனா்.