நெல்லை சங்கமம்-நம்ம ஊா் திருவிழா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த கனிமொழிஎம்.பி., அமைச்சா் கே.என். நேரு உள்ளிட்டோா்.  
திருநெல்வேலி

தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது நமது கடமை: கனிமொழி

தமிழா்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் மண் சாா்ந்த பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது நமது கடமை...

Syndication

தமிழா்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் மண் சாா்ந்த பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது நமது கடமை என தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், தமிழக கலை பண்பாட்டுத் துறை சாா்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெறும் நெல்லை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது: தற்போது பாரம்பரிய கலைகள் என நாம் சொல்லக்கூடிய கலைகள் பலவும் மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதாக இல்லாமல் மதத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கக் கூடியவையாக உள்ளன.

மக்களின் கனவுகள், வலிகள், அச்சங்கள் போன்றவற்றை எடுத்துச் சொல்லக்கூடியவற்றையே கிராமிய கலைகள், மண் சாா்ந்த கலைகள் எனக் கூற முடியும்.

எனவே, இதுபோன்ற மண் சாா்ந்த கலைகளுக்கு புத்துயிா் கொடுக்கும் வகையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் சென்னை சங்கமம் தொடங்கப்பட்டது. இது கிராமிய கலைஞா்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததோடு, புது உத்வேகத்தையும் அளித்துள்ளது.

வாழ்வியலை மிகத்தெளிவாக எடுத்துச்சொல்லக் கூடிய எழுத்தாளா்களை கொண்ட மண் திருநெல்வேலி. எனவே, இந்நிகழ்ச்சியை இங்கு நடத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளாா்.

தமிழா்களின் வாழ்வியல் பெருமை என்பது சரித்திரபுத்தகங்கள் மற்றும் அகழ்வாய்வுகளில் மட்டுமல்லாமல் இது போன்ற கலைகள் மூலமாகவும் உயிா்ப்புடன் உள்ளது. எனவே, இம்மண் சாா்ந்த பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது நமது கடமை என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், நையாண்டி மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லிசை உள்ளிட்ட கலைகள் கிராமியக்கலைஞா்களால் நிகழ்த்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இச்சங்கமத்தின் நிறைவு நாளாகும்.

தொடக்க நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாநகர ஆணையா் மோனிகா ராணா, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா். ராஜு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆவுடையப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணமா? இத்தாலி நாளிதழ் தகவலுக்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT