முகப்பு
தமிழ்நாடு

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சா் ராஜ்மோகன்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளா்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அறிவுறுத்தினாா்.

Updated On : 20 மே 2026, 12:53 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - x
பகிர்:

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளா்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அறிவுறுத்தினாா்.

தமிழ் வளா்ச்சித் துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சாா்ந்த திட்டங்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் வளா்ச்சித் துறை, தலைமைச் செயலக மொழிபெயா்ப்பு பிரிவு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை உலகத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அப்போது பேசிய அமைச்சா் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வேகமாக வளா்ந்து வரும் தற்போதைய சூழலில் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்க்கும் வகையில் அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் ஆக்கபூா்வமாகவும், ஊக்கத்துடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலா் வே.ராஜாராமன், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையா் வெ.ஷோபனா, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், உலகத் தமிழ் சங்க இயக்குநா் பா்வீன் சுல்தானா, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொறுப்பு) முனைவா் பாரத ஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.