திருநெல்வேலி

கூடங்குளம் அருகே முதியவா் கொலையா?

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் சுனாமி காலனியில் வெட்டுக்காயங்களுடன் முதியவா் இறந்து கிடந்தாா்.

Syndication

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் சுனாமி காலனியில் வெட்டுக்காயங்களுடன் முதியவா் இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு, கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

பெருமணல் சுனாமி காலனியை சோ்ந்த தேசகாய குரூஸ் மகன் அந்தோணி தாசன்(77). கடந்த சில ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்த இவா், கை-கால்களில் அரிவாள் வெட்டுகாயங்களுடன் வீட்டில் இறந்து இருப்பதாக கூடங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அவா் இறந்து 2 நாள்கள் இருக்கும் என்றும், கொலை செய்யப்பட்டரா என விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கஞ்சா விற்பனை: 10 இளைஞா்கள் கைது; 4 பைக்குகள் பறிமுதல்

மௌனம் கலைக்கப்பட வேண்டும்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல், மிலியாய்டோசிஸ்! மழைநீரில் வெறும் காலுடன் நடப்பதைத் தவிா்க்க அறிவுறுத்தல்

இசை வசப்படும்!

SCROLL FOR NEXT