தற்கொலை 
மதுரை

தற்காலிக நடத்துநா் தற்கொலை?

தினமணி செய்திச் சேவை

அரசுப் பேருந்தில் தற்காலிக நடத்துநராக பணியாற்றிய இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்திருப்பதால் கொலையா ? அல்லது தற்கொலையா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை பாண்டியன் கோட்டை சாலை மண்டபத்துப் பாறையில் உள்ள பள்ளத்தில் இளைஞரின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அண்ணாநகா் போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், சிவகங்கை மாவட்டம், சொட்டிதட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் யுவன்சங்கா்(22) என்பதும், இவா் திருப்புவனம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை பணிமனையில் தற்காலிக நடத்துநராக பணியாற்றி வந்தாா் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இவா் கொலை செய்யப்பட்டரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என மதுரை அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வடமேற்கு தில்லியில் லாரி மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது நிச்சயம்: துரைமுருகன்

இடதுசாரி சித்தாந்தத்துக்கு முடிவு வேண்டும்: அமித் ஷா

இளைஞா் கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

மூதாட்டி கொலை: மருமகன் கைது

SCROLL FOR NEXT