திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்து: காயமடைந்த காவலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த காவலாளி உயிரிழந்தாா்.

Syndication

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த காவலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (65). இவா், மேலத்திடியூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை வழக்கம்போல் வீட்டில் இருந்து பணிக்கு மொபைட்டில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது திடீரென மொபைட் கட்டுப்பாட்டை இழந்ததில் தவறி விழுந்து ராமச்சந்திரன் பலத்த காயமடைந்தாராம். அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT