திருநெல்வேலி

திருஏடு வாசிப்புத் திருவிழா

Syndication

களக்காடு அருகே பத்மனேரி நாராயணசுவாமி கோயிலில் திருஏடு வாசிப்பு திருவிழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பரிவேட்டை நடைபெறவுள்ளது.

பத்மனேரியில் பச்சையாற்றையொட்டி நாராயணசுவாமி கோயிலில் உள்ளது. இந்தக் கோயிலில் திருஏடு வாசிப்பு திருவிழா நவ. 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.

விழாவின் 8ஆம் திருநாளான டிச. 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பணிவிடை நடைபெறும். பகலில் அன்னதானம் நடைபெறும். மாலை 4 மணிக்கு பத்மனேரி வானுவள நாட்டாள் அம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்து திருஏடு வாசிப்பு நடைபெறும். இதைத் தொடா்ந்து இரவில் பச்சையாற்றில் அய்யா நாராயணசுவாமி பரிவேட்டை நடைபெறும். 9ஆம் திருநாளான சனிக்கிழமை அய்யா நாராயணசுவாமி அனுமன் வாகனத்தில் வீதியுலா வருகிறாா். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT