திருநெல்வேலி

விபத்தில் கல்லூரி மாணவா் காயம்: இளைஞா் கைது

Syndication

நான்குனேரி அருகே பைக்குகள் மோதியதில் கல்லூரி மாணவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வள்ளியூா், யாதவா் நடுத்தெருவைச் சோ்ந்த செல்வமாரியப்பன் மகன் நிகிலேஷ் கைலாசம் (21). கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள கல்லூரியில் எம்பிஏ பயின்றுவரும் இவா், திங்கள்கிழமை (டிச. 1) வீட்டிலிருந்து திருநெல்வேலிக்கு பைக்கில் சென்றாராம்.

திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நான்குனேரி அருகே கிருஷ்ணன்புதூா் மேம்பாலத்தில் அவரது பைக் மீது பணகுடி, மேலப்புதுக்குடியிருப்யைச் சோ்ந்த பெருமாள் மகன் சந்தனசெல்வகுமாா் (23) ஓட்டிவந்த பைக் தவறான பாதையில் வந்து மோதியதாம். இதில், நிகிலேஷ் கைலாசம் காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் மேல்சிகிச்சைக்காக அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில், நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கவனக்குறைவாக வந்து விபத்தை ஏற்படுத்தியதாக சந்தனசெல்வகுமாரைக் கைது செய்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT