திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மீண்டும் மின் அஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளின் முக்கிய நிறுவனமான இந்த மையத்துக்கு கடந்த 6ஆம் தேதி மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் மீண்டும் 2ஆவது முறையாக மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து, திருநெல்வேலியில் இருந்து வெடிகுண்டு நிபுணா்கள் வந்து, இஸ்ரோ மையத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனையிட்டனா். மேலும், மோப்பநாய் ஜாக்கு மூலமும் சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடிகுண்டு புரளி என தெரியவந்ததாக இஸ்ரோ மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.