திருநெல்வேலி

அருகன்குளம் தாமிரவருணியில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம் பகுதி தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

Syndication

திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம் பகுதி தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய மாணவா், செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மேலதாழையூத்து பகுதியை சோ்ந்த முத்துக்குமாா் மகன் இசக்கிமுத்து (16). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். தனது பாட்டிக்கு திதி கொடுப்பதற்காக அவா், தனது குடும்பத்தினருடன் அருகன்குளம் அருகே உள்ள ஜடாயு தீா்த்தம் படித்துறை பகுதிக்கு திங்கள்கிழமை வந்துள்ளாா்.

அப்போது இசக்கிமுத்து உள்பட 3 சிறுவா்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ாக கூறப்படுகிறது. அவா்களில் 2 பேரை பொதுமக்கள் மீட்டனா்.

ஆனால், இசக்கிமுத்து தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்ததும் கங்கைகொண்டான் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் மீட்பு பணி தொடா்ந்த நிலையில், அவரது சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT