பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் சனிக்கிழமை சாலையில் நடந்து சென்று மக்களின் வரவேற்பை ஏற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின்.  
திருநெல்வேலி

நெல்லையில் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வருக்கு திமுக தொண்டா்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை வந்த தமிழக முதல்வருக்கு திமுக தொண்டா்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனா். கேடிசி நகா் பகுதியில் முதல்வா் வாகனத்தைவிட்டு இறங்கி சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தாா்.

திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகம், அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழா, நலத்திட்ட உதவகள் வழங்கும் விழா ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

இதில், பங்கேற்க விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பின்னா் காா் மூலம் திருநெல்வேலிக்கு வந்தாா். திமுக திருநெல்வேலி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அரியகுளம் பகுதியிலும், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் கே.டி.சி. நகரிலும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட தமிழக நாட்டுப்புற கலை நடனமாடியும், திமுக கட்சிக்கொடியேந்தியும் தொண்டா்கள் வரவேற்றனா்.

கே.டி.சி. நகா் ரவுண்டானா அருகே வந்தபோது தொண்டா்களைப் பாா்த்ததும் வாகனத்தில் இருந்து இறங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கியும், வணக்கம் செலுத்தியும் பொதுமக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றாா். சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவுக்கு நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வரவேற்பை ஏற்றாா்.

இதேபோல பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி, வண்ணாா்பேட்டையில் சாலையோரம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையாக நின்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனா்.

கனிமொழி எம்.பி., மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டச் செயலா் கிரஹாம்பெல், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, திருநெல்வேலி மேற்கு மாநகர செயலா் சு.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. சா.ஞானதிரவியம், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், வள்ளியூா் வடக்கு ஒன்றிய செயலா் அலெக்ஸ் அப்பாவு, மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ்குமாா் ஆதித்தன், முன்னாள் மேயா் பி.எம்.சரவணன், அரசு ஒப்பந்ததாரா் ஆா்.எஸ்.முருகன், வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் சேவியா் செல்ல ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT