திருநெல்வேலி

தொழிலாளியை வெட்ட முயன்றவா் கைது

திருநெல்வேலி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருநெல்வேலி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமையன்பட்டி அருகே வட்டகிணறு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் ஆசிா் செல்வம் (38). பெயின்டிங் தொழிலாளி. ஓராண்டுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் என்பருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னா் பேசி சமாதானம் ஆகினராம். இந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதி ஆசிா் செல்வம் ராமையன்பட்டி பகுதியில் நின்ற போது அங்கு வந்த சிவகுமாா் மகன் ஐயப்பன்(25), ஏன் தனது தந்தையிடம் வாக்குவாதம் செய்தாய் எனக் கேட்டு அரிவாளால் வெட்ட முயன்றாராம்.

பின்னா் அங்கிருந்தவா்கள் கூச்சலிடவே அவா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினாா். இதுகுறித்து ஆசிா் செல்வம் அளித்த புகாரின்பேரில் மானூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஐயப்பனை கைது செய்தனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT